Friday, November 19, 2010

மனிதம் காப்போம்!

மனிதர்கள் வாழ்கின்ற தேசத்தில்
மனிதம் ஏனோ மட்கிப்போனது?
மரம்போல் அல்ல- பலர்
மரத்துப்போய் வாழ்கின்றார்!
மறுநாள் மடிந்துபோகும் மலர்களை நேசிக்கின்றோம்
மலர வேண்டிய மனங்களை மறந்து!
மாளிகைகள் பெருகினாலும்! மண் குடிசை மறையவில்லை!
மாறாக மாறிவிட்டன மண்தரையாய் !
மாளிகையை பூட்டிவைத்து, பூட்டிற்க்கும் காவல்போடும்
செல்வந்தர் பலரிருக்க!
காற்றை மட்டும் கற்சுவராய், கண்களே கதவுகளாய்,
கண்ணீரே உடமைகளை கொண்டவரும் பலருண்டு!
அன்று சீதை தாண்டிய கோடு லட்சுமணன் போட்டதாம்!
சீர்திருத்தம் பல கண்டும் தாண்ட முடியா இந்த வறுமைக்கோடு யார் போட்டது?
எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளாம்!
உண்மையெனில் ஏனிந்த ஏற்றத்தாழ்வு!
வேளைக்கு பல வகையாய் பட்சணங்கள் ஓர் இடத்தில்!
ஒரு பருக்கை உணவுகூட கிடைப்பதில்லை ஓர் இடத்தில்!
வலுத்தவர்கள் முதலாளியானார்!
இளைத்தவர்கள் எழைகளானார்!
பலவகை பட்சணமும் தரவேண்டாம்!
பட்டினிச்சாவும் தரவேண்டாம்! 
உனக்கு உடையதை தரவேண்டாம் !
பசிதவேளைக்கு உணவு பெற உழைக்கின்றார்!

உழைத்தவனுக்கு உரியது தந்தால் போதும்!

 யார் உழைப்பையும் தரவேண்டாம்!
ஒட்டுண்ணியாய் வழதிருந்தால் போதும்!
கருணை காட்ட வேண்டாம்!
கண்ணீர் தராதிருந்தால் போதும்!
பங்கு தரவேண்டாம்! பதுக்காமல் இருந்தால் போதும்!
 தானம் தரவேண்டாம்! தட்டிப்பறிக்கதிருந்தால் போதும்1
மொத்தத்தில் மனிதர்களை பணமாய்  பாராமல்!
                                                        மதங்களாய் பாராமல்!
                                                        மனங்களாய் பார்ப்போம்!
                                                        மனிதம் காப்போம்!
                                                        புனிதம் சேர்ப்போம்!
புவியெங்கும் புன்னைகைப்பூ மலரச்செய்வோம்!

1 comment: