Thursday, October 21, 2010

சாதி(தீ)

சாதி என்னும் போர்வையை போர்த்திக்கொள்ளும் ஒவ்வொருவரும் சரித்திரத்தை ஒருமுறையாவது படித்தோ அல்லது படித்தவர்களை கேட்டோ தெரிந்து கொண்டு பின்னர் தாம் என்ன சாதி என்பதை உணர்ந்த பின்னர் பேசட்டும். கி.பி. களில் எல்லோருமே ஆடை கூட அணியாத வேடர்களாய் திரிந்தவர்தாம். எங்கிருந்து வந்தது இந்த மேல் சாதி கீழ் சாதி?
ஏதோ ஒரு கூட்டம் தன் சுயநலத்திற்காக தான் நினைத்ததை "சாதி"க்க   கொளுத்திப்போட்ட கொள்ளிக்கட்டைதான் இந்த சாதி(தீ). கல்வி அறிவும், தொலை தொடர்பும், எல்லோரும் வரலாற்றை புரட்டி பார்க்க வசதியுள்ள இந்நாளிலும் இந்த சாதியை கட்டிக்கொண்டு மார்தட்டிக்கொள்ளும் சிலரை என்னவென்று கூறுவது? ஆறாவது அறிவை தின்றுவிடும் இந்த சாதி என்னும் கிருமி நமக்கு தேவைதானா?

எப்படி யோசித்தாலும் நாம் எல்லோருமே உறவுகள் தான். மிருகங்கள் நம்மில் சாதி பார்க்கவில்லை ஆனால் நாமோ மிருகங்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இனியாவது நாம் நம் உறவுகளை நேசிப்போம் எந்த வேறுபாடுமின்றி.

 சாதி இரண்டொழிய வேறில்லை!

No comments:

Post a Comment