Friday, November 19, 2010

மனிதம் காப்போம்!

மனிதர்கள் வாழ்கின்ற தேசத்தில்
மனிதம் ஏனோ மட்கிப்போனது?
மரம்போல் அல்ல- பலர்
மரத்துப்போய் வாழ்கின்றார்!
மறுநாள் மடிந்துபோகும் மலர்களை நேசிக்கின்றோம்
மலர வேண்டிய மனங்களை மறந்து!
மாளிகைகள் பெருகினாலும்! மண் குடிசை மறையவில்லை!
மாறாக மாறிவிட்டன மண்தரையாய் !
மாளிகையை பூட்டிவைத்து, பூட்டிற்க்கும் காவல்போடும்
செல்வந்தர் பலரிருக்க!
காற்றை மட்டும் கற்சுவராய், கண்களே கதவுகளாய்,
கண்ணீரே உடமைகளை கொண்டவரும் பலருண்டு!
அன்று சீதை தாண்டிய கோடு லட்சுமணன் போட்டதாம்!
சீர்திருத்தம் பல கண்டும் தாண்ட முடியா இந்த வறுமைக்கோடு யார் போட்டது?
எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளாம்!
உண்மையெனில் ஏனிந்த ஏற்றத்தாழ்வு!
வேளைக்கு பல வகையாய் பட்சணங்கள் ஓர் இடத்தில்!
ஒரு பருக்கை உணவுகூட கிடைப்பதில்லை ஓர் இடத்தில்!
வலுத்தவர்கள் முதலாளியானார்!
இளைத்தவர்கள் எழைகளானார்!
பலவகை பட்சணமும் தரவேண்டாம்!
பட்டினிச்சாவும் தரவேண்டாம்! 
உனக்கு உடையதை தரவேண்டாம் !
பசிதவேளைக்கு உணவு பெற உழைக்கின்றார்!

உழைத்தவனுக்கு உரியது தந்தால் போதும்!

 யார் உழைப்பையும் தரவேண்டாம்!
ஒட்டுண்ணியாய் வழதிருந்தால் போதும்!
கருணை காட்ட வேண்டாம்!
கண்ணீர் தராதிருந்தால் போதும்!
பங்கு தரவேண்டாம்! பதுக்காமல் இருந்தால் போதும்!
 தானம் தரவேண்டாம்! தட்டிப்பறிக்கதிருந்தால் போதும்1
மொத்தத்தில் மனிதர்களை பணமாய்  பாராமல்!
                                                        மதங்களாய் பாராமல்!
                                                        மனங்களாய் பார்ப்போம்!
                                                        மனிதம் காப்போம்!
                                                        புனிதம் சேர்ப்போம்!
புவியெங்கும் புன்னைகைப்பூ மலரச்செய்வோம்!
என் கண்ணாடி இதயத்தில் காதலெனும் பூவெறிவாய் என கால்கடுக்க காத்திருந்தேன்!
நீயும் எறிந்தாய்  நானோ உடைந்தேன் - நீ எறிந்தது உன் காதல் முற்றி விடுத்த காயை!
இத்தனை காலமா முடிவெடுக்க உன் விருப்பம் யார்மீதென்று!
உன்னவனுக்கு சொல்லிவிடு என் அனுதாபத்தை!

சந்தேகத்தீ

என்னை மலரென்று வர்ணித்த நீயே
என்னை பொசுக்கிவிட்டாய் - உன் சந்தேகத்தீயால்

உன்னை மட்டும் என் நண்பனாக!

கல்விக்கு கரையில்லை! அன்புக்கு அளவில்லை! நட்புக்கு வயதில்லை!
அன்பால் இணைந்தோம்! உன்பால் நானும் என்பால் நீயும் கொண்ட
நட்பால் உயர்ந்தோம் - நெகிழ்ந்தோம்!
என் பெற்றோரை நான் தேர்ந்தெடுக்கவில்லை!
என் பெயரை நான் தேர்ந்தெடுக்கவில்லை!
நான் தேர்ந்தெடுத்தது உன்னை மட்டும் என் நண்பனாக!

Monday, November 8, 2010

PLEASE CONTRIBUTE YOUR VOTE

2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன் திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம்  நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக
மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை
சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில்
யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு
ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.

இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலைசிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.

பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது  கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப்
சமையல் கலை வல்லுநர் pஇவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல்
நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார்.
இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது  சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட. நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற
பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள்.
இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது
ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன்சேமித்து வைக்கும் இடம் அதுவே.
ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php
Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

Check this article:
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/

Narayanan Krishnan, all of 29 years old now, does what he was
professionally trained to do as a chef. Feed people. Only Krishnan
does not do this in the swanky confines of a 5-star hotel. Every day,
he wakes up at 4 am, cooks a simple hot meal and then, along with his
team, loads it in a van and travels about 200 km feeding the homeless
in Madurai , Tamil Nadu.

Krishnan feeds, often with his hands, almost 400 destitute people
every day. And for those who need it, he provides a free haircut too.

Eight years ago, this award-winning chef with a five-star hotel chain
was all set to go to Switzerland for a high-profile posting. On a
visit to a Madurai temple, he came across a homeless, old man eating
his own human waste. That stark sight changed Krishnan's life.

Much to the dismay of his parents, Krishnan abandoned his career plans
and decided to spend his life and his professional training in looking
after those who could not care for themselves. He has provided more
than 1.2 million hot meals through his nonprofit organization Akshaya
Trust, and now hopes to extend this to shelter for the homeless too.

Krishnan is the only Indian in a list of 10 heroes that CNN has picked
worldwide to honour. One of them will be chosen CNN Hero of the Year,
selected by the public through an online poll. If many Indians get
together to vote for this inspiring man, he can win by a long mile.

If Krishnan wins he will get $100,000 in addition to the $25,000 that
he gets for being shortlisted for the Top 10. Akshaya Trust needs all
the monetary support it can get to build on Krishnan's dream. Let's
help him get there.

Vote for Mr.Krishnan here.

http://heroes.cnn.com/vote.aspx

Spread the word!!

Thursday, October 21, 2010

சாதி(தீ)

சாதி என்னும் போர்வையை போர்த்திக்கொள்ளும் ஒவ்வொருவரும் சரித்திரத்தை ஒருமுறையாவது படித்தோ அல்லது படித்தவர்களை கேட்டோ தெரிந்து கொண்டு பின்னர் தாம் என்ன சாதி என்பதை உணர்ந்த பின்னர் பேசட்டும். கி.பி. களில் எல்லோருமே ஆடை கூட அணியாத வேடர்களாய் திரிந்தவர்தாம். எங்கிருந்து வந்தது இந்த மேல் சாதி கீழ் சாதி?
ஏதோ ஒரு கூட்டம் தன் சுயநலத்திற்காக தான் நினைத்ததை "சாதி"க்க   கொளுத்திப்போட்ட கொள்ளிக்கட்டைதான் இந்த சாதி(தீ). கல்வி அறிவும், தொலை தொடர்பும், எல்லோரும் வரலாற்றை புரட்டி பார்க்க வசதியுள்ள இந்நாளிலும் இந்த சாதியை கட்டிக்கொண்டு மார்தட்டிக்கொள்ளும் சிலரை என்னவென்று கூறுவது? ஆறாவது அறிவை தின்றுவிடும் இந்த சாதி என்னும் கிருமி நமக்கு தேவைதானா?

எப்படி யோசித்தாலும் நாம் எல்லோருமே உறவுகள் தான். மிருகங்கள் நம்மில் சாதி பார்க்கவில்லை ஆனால் நாமோ மிருகங்களைக்கூட விட்டுவைக்கவில்லை. இனியாவது நாம் நம் உறவுகளை நேசிப்போம் எந்த வேறுபாடுமின்றி.

 சாதி இரண்டொழிய வேறில்லை!

Monday, October 18, 2010

சோதனை

உலகையே சிரிக்க வைத்தவர் சார்லி சாப்ளின்! ஆனால் அவரது வாழ்க்கை சந்தோஷமாக இருந்ததே இல்லை. பிறந்ததில் இருந்தே துன்பங்கள், அவமானங்கள், தோல்விகள்! 1889-ல்…லண்டன் நகரில் சாப்ளின் பிறந்து ஓரிரு வருடங்களிலேயே பெற்றோரிடையே சண்டை வந்து விவாகரத்து அகிவிடவே, பேசத் தொடங்கும் முன்பே, தாயுடன் சேர்ந்து மேடையில் பாட வேண்டிய நிர்பந்தம். ஐந்து வயதுச் சிறுவனின் பாட்டுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு, ஏழு வயதிலேயே பறிபோனது. காரணம், அவரது தாயாரின் மனநிலை பாதிக்கப்பட்டதுதான். 


குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக முடிதிருத்தும் நிலையம், கண்ணாடித் தொழிற்சாலை, மருத்துவமனை என எங்கெங்கோ வேலைபார்த்தவர் சில காலம் தந்தையுடன் சேர்ந்து மேடை நாடகங்களிலும் நடித்தார். ஆனால் தந்தை திடீரென இறந்துவிடவே, மீண்டும் தொய்வு! 1910ல்…நாடகக் குழுவினருடன் அமெரிக்கா சென்றவருக்கு குறும்படங்கலில் நல்ல பெயர் கிடைத்தது. அவரது முத்திரை நடிப்பான ‘டிராம்ப்’ (பேகி பேண்ட், தொப்பி, கைத்தடி, வளைந்த கால்கள்) பிரபலமானது. ‘தி கிட்’ படத்தில் தொடங்கிய வரவேற்பு ‘தி கிரேட் டிக்டேட்டர்’ வரை நீடித்தது. ஆனால், இந்த காலகட்டங்களில் குடும்ப வாழ்வு அவரை பாடாய்ப் படுத்தியது.

1981-ல் நடந்த முதல் திருமணம் இரண்டு வருடம் மட்டுமே நீடித்தது. அதற்கு பின் நடந்த இரண்டு திருமணங்களும் கூட சாப்ளினுக்கு சோகத்தை மட்டுமே கொடுத்தன. 1920-ல் நான்காவது மனைவியாக ஓ ரெய்ல் அமைந்தபின் இல்லறத் தொல்லைகள் நின்றன. 1945-ம் ஆண்டு சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் தீவிரவாதி என அமெரிக்க அரசு குற்றம் சாட்டியது. இரண்டாவது மனைவி ஜோன் பெர்ரியும் சாப்ளின் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தார். அவர் தரப்பு நியாயங்களை அமெரிக்க அரசு கேட்காததால், வேறு வழியின்றி, 1952-ல் கனத்த இதயத்துடன் சுவிட்சர்லாந்தில் அடைக்கலமானார் சாப்ளின்.

1972-ல்… காலச் சக்கரம் சுழல, அதே அமெரிக்க அரசு, ‘உலகின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்’ விருதுபெற சாப்ளினை அழைத்தது. பரிசினை ஏற்றுக் கொண்டாலும், அமெரிக்காவில் தங்க விருப்பமின்றி, மீண்டும் சுவிட்சர்லாந்து திரும்பினார். விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து நின்று, “வாழ்நாள் முழுவதும் போர்களமாக இருந்தாலும் எப்படி ஜெயித்தீர்கள்? அது என்ன ரகசியம்?” எனக் கேட்டார்கள்.

சாப்ளின் சிரித்தார், “இந்த நிலை மாறிவிடும்” என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி… மாறிவிடும்! இதோ இந்த கணத்திலும் கூட! வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த அந்த நடிகனிற்கு, கலைஞனுக்கு ஏற்பட்ட சோதனை நம் வெற்றிக்கு நல்லசாவி.


ன்றி.... Murali Mohan

Friday, September 17, 2010

ஒய்வு

துரோகங்களை தூக்கிபோட்டு நடக்கின்றேன் !
ஒவ்வொருமுறையும் கனவுகள் கண்டு விழித்தவளாய்!
ஓய்வெடுக்க நினைத்துதான் துவங்குகிறேன்-ஆனால்
கனவுகள் ஓய்வதேயில்லை!

சித்தாந்தம்

உறவுகள் பொய்யாகும்போதுதான், உலகின் உண்மைகள் விளங்கும் !
உண்மைகள் விளங்கும்போது, உலகமே பொய்யாய் தோன்றும்!
உறவுகளும் பொய்தான் உலகமும் பொய்தான்!
மெய் தேடி அலையும் மனிதன் மெய் கண்டு அறியும்போது
மெய் விட்டு பிரியும் உயிரே!